திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் உற்சவத்தில் குழல் ஊதும் வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் வீதி உலா வந்தார்.
வீதி உலாவில் மணிப்பூர், ராஜஸ்தான், குஜராத், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் லம்பாடிகள் நடனம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர். வீதியுலாவின்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் ஏழுமலையானை பரவசத்துடன் வணங்கினர்.
