சவூதி அரேபியாவின் எண்ணெய் கிடங்குகள் மீது வான் தாக்குதல் தொடுக்கப்பட்டதையடுத்து பெட்ரோலியப் பொருட்கள் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அவசியமானால் அவசர காலத்திற்காக கையிருப்பில் உள்ள பெட்ரோலியப் பொருட்களை சந்தைக்கு அனுப்பி சந்தைகளில் விநியோகம் பாதிக்கப்படாதிருக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்த ட்விட்டர் பதிவில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட உள்ள பைப் லைன் பெட்ரோல் விநியோகத்தை அங்கீகரிக்கவும் தமது அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சவூதியில் அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலமாக வான் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்கில் பயங்கர தீப் பற்றியது. இதனால் 5 புள்ளி 7 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
