தனுஷ்கோடியில் 55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் கடலில் மூழ்கிய தரைப்பாலம் மணல் அரிப்பிலிருந்து வெளியாகி பார்வைக்கு தெரியவந்துள்ளது.
கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி நள்ளிரவில் தனுஷ்கோடியில் வீசிய புயலால், அந்த நகரமே சின்னாபின்னமானது.
இந்தக் கொடூர புயலில் சிக்கிய ரயில் பாதை, சாலைகள் எல்லாம் மண்ணுக்குள் புதைந்து போயின. அவ்வாறு தனுஷ்கோடி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் ஒன்று, தற்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் மணல் அரிப்பிலிருந்து வெளியாகி பார்வைக்கு தெரியவந்துள்ளது.
சுமார் 20 அடி அகலமும், 60 அடி நீளமும் கொண்ட இந்த தரைப்பாலம் அப்பகுதி மீனவர்களையும், சுற்றுலா பயணிகளையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
