வங்கிக் கடன் மோசடி தொடர்பாக நாட்டின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
வங்கிகளில் தாங்கள் பெற்ற கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. அந்த வகையில் மொத்தம் 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்நிலையில், வங்கிக் கடன் மோசடி தொடர்பாக 12 மாநிலங்களில் உள்ள 18 முக்கிய நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ள அதிகாரிகள், வங்கி மோசடி தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
