சுங்கத்துறையில் ஊழல் புகாருக்கு ஆளான 22 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பாளர் அந்தஸ்துடைய சில அதிகாரிகள் மீது முறைகேடு மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்கள் வந்ததைத் அடுத்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை அமைப்பான சிபிஐசி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்கள் நலன் கருதியும் வரித்துறையில் முறைகேடுகளைக் களையவும் 22 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையாக வருமான வரித்துறை அதிகாரிகள் 27 பேருக்கு கடந்த ஜூன்மாதம் கட்டாய ஓய்வளிக்கப்பட்டது. ஊழலை சகித்துக் கொள்ளக்கூடாது என்று பிரதமர் மோடி உத்தரவிட்டதன் பேரில் ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
