17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு கடந்த 30ந் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின், 19ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். வரும் 20ந் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார்.
