மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக மாண்ட்சூர் மற்றும் நீமுச் மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அம்மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடரும் கனமழையால் மாண்ட்சூர் மற்றும் நீமுச் மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இதில் மாண்ட்சூர் மாவட்டத்தில் 100 முதல் 125 கிராமங்கள் வரை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மான்ட்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹிதேஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
