தெறி, மெர்சல் படங்களின் வெற்றியால் அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கால்பந்தாட்டம் தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரிக்கிறது.விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, இந்துஜா, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.நாளை(ஜூன் 22) விஜய் பிறந்தநாள் என்பதால் இன்று(ஜூன் 21) மாலை 6மணியளவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர். இந்த போஸ்டரில் மீன் மார்க்கெட் பின்னணியில் இரண்டு விஜய் உள்ளனர். ஒருவர் கால்பந்தாட்ட விளையாட்டு வீரராக இளமையாக உள்ளார். மற்றொரு விஜய், சற்றே வயதான தோற்றத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி அருகில் மீன் வெட்டும் கத்தியுடன் தாதா போன்று உள்ளார். இதை பார்க்கையில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பார் என தெரிகிறது. அதாவது அப்பா – மகன் வேடத்தில் நடிப்பார் என தெரிகிறது.காலை முதலே விஜய் தொடர்பான ஹேஷ்டாக் உடன் டுவிட்டரில் டிரெண்ட்டிங்கில் இருந்த விஜய் ரசிகர்கள் போஸ்டர் வெளியானதும் உலகளவில் டிரெண்ட்டிங்கிற்கு கொண்டு வந்தனர்.
