சென்னையை அடுத்த நெம்மேலியில் ஆயிரத்து 689 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
நெம்மேலியில் தற்போது இயங்கி வரும் நிலையத்திற்கு அருகில், 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சத்தின் அனுமதி பெறப்பட்டு, பணியானையும் வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நிதியுதவியுடன் இத்திட்டம் 30 மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
