கிருஷ்ணகிரியில் தொடங்கிய மாங்கனி கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தோட்டக்கலை மூலம் நவதானியங்களால் செய்யப்பட்ட நாடாளுமன்றக்கட்டிடம், ரோஜா மலர்களால் ஆன கிரிக்கெட் உலக கோப்பை ஆகியவை பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன.
செந்தூரா, மல்கோவா, பீத்தர், காதார், நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மா ரகங்களும், கார்னேசன், தாஜ்மகால் போன்ற மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மா ரகங்களை காட்சிப்படுத்தவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் ஆண்டுதோறும் 29 நாட்கள் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
