பெட்ரோல் பங்குகள் மூலமாகவே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கும் பேட்டரிகளை சார்ஜ் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் 2023ம் ஆண்டுக்குள் மூன்று சக்கர வாகனங்களையும், 2025ம் ஆண்டுக்குள் 150 சிசி திறன் வரையிலான அனைத்து இரு சக்கரவாகனங்களையும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் தயாரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் சார்ஜிங் பாயிண்டுகள் இல்லாததை காரணமாகக் கூறும் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த திட்டம் சாத்தியமில்லாதது எனக் கூறி வந்தன. இந்நிலையில் எரிபொருள் நிலையங்கள் மூலமே வாகன பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது சுமார் 60 ஆயிரம் எரிபொருள் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அதே அளவுக்கு எரிபொருள் நிலையங்களை அதிகப்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதனால் அதிகளவு சார்ஜிங் பாயிண்டுகள் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிக்க எவ்வித மறுப்பும் கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
