இங்கிலாந்து: பிரித்தானியாவில் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் வரையிலான முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்த்தைவிடவும் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணியாளர்களின் வேதனமானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 3.4% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட பின்னரான வேதன அதிகரிப்பு 1.4% ஆக காணப்படுகின்றது.
இதேவேளை வேலையின்மை 3.8% ஆக உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 72% ஆக அதிகரித்துள்ளதனால் பெண்களுக்கான ஓய்வூதிய வயதெல்லை 60 – 65 என்ற மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
