ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 2500க்கும் மேற்பட்ட பதுங்கு தளங்கள் கட்டப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய எல்லைப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. அதனை தடுக்கும் விதத்தில் எல்லைப் பகுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதுங்கு தளங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய இடங்களில் பாதுகாப்புக்காக பதுங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன.
குறிப்பாக ஜம்மு, கத்துவா, சம்பா, ரஜோரி, பூன்ச் ஆகிய எல்லையோர மாவட்டங்களில் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 2514 பதுங்குதளங்கள் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணைந்து இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
