பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல், தங்கம், இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள், இறக்குமதி முந்திரி கொட்டைகள், பிவிசி பைப்புகள், வினைல் புளோரிங் சாதனங்கள், டைல்ஸ், உலோக பிட்டிங்குகள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், சிந்தடிக் ரப்பர் வகைகள், மார்பிள் பலகைகள், கண்ணாடி இழைக் கேபிள்கள், கண்காணிப்பு கேமராக்கள், டிஜிட்டல் மற்றும் வீடியோ ரெகார்டர் சாதனங்களின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டுக்கான வரியும் இந்த பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்னணு சாதனங்கள், மின்சாரத்தால் இயக்கப்படும் வாகனங்கள், பாதுகாப்புத் துறை கருவிகள், கச்சா மற்றும் பகுதி அளவு முடிந்த தோல், செல்போன் சார்ஜர், செட்டாப் பாக்ஸ் போன்ற பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
