சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய கட்டுப்பாட்டின் கீழ், பாளையங்கோட்டையில் ஆய்வு மையம் இயங்கி வருகிறது.
இந்த மைய வளாகத்தில் விண்வெளியில் இருந்து வரும் தகவல்களை பரிமாறிக்கொள்ள பிரத்யேக மையம் அமைக்கப்பட்டது. 14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை இஸ்ரோ தலைவர் சிவன் திறந்துவைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜுலை 15ம் தேதி சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் ககன்யான் விண்கலம் மூலம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறினார்.
