நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூ கலடோனியா தீவிற்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நியூ கலடோனியா தீவில் இருந்து 155கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இதன் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள குட்டி குட்டி தீவுகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றி இருக்கும் 1000 கிமீ வரை பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.
