ஹிந்தித் திரையுலகில் அதிகமான 100 கோடி படங்களைக் கொடுத்த முன்னணி நடிகர் சல்மான் கான். தான் அறிமுகமான காலத்திலிருந்தே சட்டையைக் கழற்றி போஸ் கொடுத்து தன் உடலழகை வெளிக்காட்டியவர். உடற்பயிற்சி மீது அதிக அக்கறை கொண்டவர். அவருடைய ஒவ்வொரு படத்திலும் அவருடைய கட்டுமஸ்தான உடலைப் பார்த்து ரசிப்பவர்கள் அதிகம் பேர் என்றால் அது மிகையில்லை.இந்தியர்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர் சல்மான் கான். கடந்த ஏப்ரல் மாதம் உடற்பயிற்சி கருவிகளை நாடு முழுவதும் உள்ள 175 ஜிம்களில் நிறுவினார். அடுத்து இந்தியா முழுவதும் 300க்கும் அதிகமான ஜிம்களை 2020க்குள் திறக்க முடிவு செய்துள்ளாராம். அதன் மூலம் பல பயிற்சியாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம்.இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முன்னணியில் இருக்கும் சல்மான் கானின் இந்த வியாபாரத் திட்டம் அவருடைய பெயருக்காகவே பிரபலமாகும் என்கிறார்கள்.
