பள்ளி மாணாக்கர்களுக்கு ஒழுக்கத்தையும் பழக்கவழக்கங்களையும் மேம்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்க, மாணவர்கள் விளையாட்டிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“நண்பனாக இரு, துன்புறுத்துபவனாக இருக்காதே” என்ற யுனெஸ்கோவின் ஆய்வறிக்கை வெளியீட்டு விழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. மாணவ-மாணவிகளை பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த ஆய்வறிக்கையை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர் என்றார்.
நீட் தற்கொலைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்கும் பார்வை விளையாட்டுகள் மூலம் மாணவர்களுக்கு கைவரப்பெறும் என்றார். மாணவர்கள் விளையாட்டிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், இதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.
