திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அதிவேகத்தில் தொழில் அதிபர் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
அவிநாசியிலிருந்து அணைப்புதூர் நோக்கி அதிவேகமாக சென்ற, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிண்ட்லே சொகுசு கார், முன்னால் சென்ற இருசக்கரவானத்தின் மீது மோதியுள்ளது.
இதில் இருசக்கர வாகன ஓட்டி முத்துநாயகம் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார். மேலும் சாலையில் நடந்து சென்ற மருதாச்சலம் என்பவர் மீதும் கார் மோதியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் அருகில் உள்ள தொழிலதிபர் லட்சுமணன் வசிக்கும் குடியிருப்புக்குள் சென்றதால் பொதுமக்கள் துரத்திச்சென்று முற்றுகையிட்டனர். அவிநாசி போலீசார் நடத்திய விசாரணையில் காரை தொழில்அதிபர் மகன் விபின் ஓட்டிச்சென்றது தெரிய வந்ததையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
