தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக இருந்த மு.பெ.சாமிநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவருக்குப் பதில் தி.மு.க. சட்ட விதிகளின்படி இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் மேளதாளத்துடன் கொண்டாடினர்.
