திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத்திருவிழாவினை திரளான பக்தர்கள் விடிய விடிய கண்டுகளித்தனர்.
இரண்டாம் நாளான நேற்று பார்வதி சமேத கல்யாணசுந்தரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தியாகராஜ சுவாமி ஆலயத்திலிருந்து புறப்பட்டு வீதிகளில் வலம் வந்து கமலாலயத் திருக்குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்.
இந்த தெப்பமானது குளத்தில் செல்லும் போது பிரமாண்ட மிதக்கும் மாளிகை செல்வது போல் காண்பவர்களுக்கு காட்சியளித்தது.
