திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ஏலத்தின் மூலம் தேவஸ்தானத்திற்கு 7 கோடியே 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது ஐதீகம். தினமும் சுமார் 30 முதல் 40 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்த தலைமுடி தரம் வாரியாக பிரிக்கப்பட்டு இ-டெண்டர் மூலம் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை ஏலம் விடப்படுகிறது. இதன்படி நேற்று 3 ஆயிரத்து 800 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 7 கோடியே 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
