அமலாக்கத்துறை மல்லையாவை ”தலைமறைவு குற்றவாளி” என்றும் அவரது சொத்துக்களை கைப்பற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா கோரிக்கை வைத்தார்.
”இந்திய சட்டப்படி ஒருவரை பணமோசடியில் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்க நேர்ந்தால் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு”
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் ரஞ்சன் கோகோய் மல்லையாவின் பெயரில் குறிப்பிடப்பட்ட அடைமொழியை நீக்குவது குறித்து அமாலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், அமாலக்கத்துறையின் மல்லையா சொத்து குறித்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறியுள்ளது.
அதாவது, இந்திய அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் லண்டனில் புகலிடம் தேடி ஓடிய விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்க கோரி கேட்டிருந்தது. இதை எதிர்த்து மனுத் தொடுத்த விஜய் மல்லையாவின் மனுவிற்கு விளக்கம் அளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை
கடந்த 2016-ம் ஆண்டு இந்திய வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடியவர் விஜய் மல்லையா. லண்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சார்பில் தொடர்ப்பட்ட வழக்கில் மல்லையாவை நாடு கடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 10ம் தேதி வரவுள்ளதை அடுத்து மல்லையா பணத்தை திருப்பி தருவதாகவும் அதனை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
