தமிழகத்தில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீரை தர முன்வருமென தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து சண்முகத்திடம் விழுப்புரத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்திற்குள்ளேயே தண்ணீர் பிரச்சனையை திமுக எழுப்புவது கண்டிக்கதக்கது என்றார்.
