சென்னையில், மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் முன்னறிவிப்பு இன்றி, திடீரென நடத்திய வேலைநிறுத்தபோராட்டத்தால், பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக மாத இறுதி நாளில் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம்செலுத்தப்படும். ஆனால் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
