பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்த்தார்புருக்கு இருநாடுகளின் எல்லைகளையும் திறப்பது பற்றி ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் பேச்சுநடத்த பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ள மத்திய அரசு கர்த்தார்புர் குருதுவாராவிற்கு சீக்கியர்கள் சென்று வர இந்த ஒரு விவகாரத்திற்கு மட்டும் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளது.
ஜூலை 11 முதல் 14 வரை ஒரு தேதியை தேர்வு செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. குருநானக்கின் 550வது பிறந்தநாள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வர உள்ளநிலையில் அந்த புனித நாளில், குருநானக்கால் கட்டப்பட்டதாக கூறப்படும் கர்த்தார்புர் குருதுவாராவின் பாதையை பாகிஸ்தான் திறந்துவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
