பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. லுதியானாவின் மையப் பகுதியில் அமைந்த வர்த்தக கடையில் தீப்பிடித்தது. தீ வேகமாகப் பரவி கடையை முழுவதுமாக எரித்தது.
6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் கருகிய பொருட்களின் இழப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
