வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் கஜா புயல் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ, நாகைக்கு வடகிழக்கே 300கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு 11 மணியளவில் நாகை அருகே கரையைக்கடக்கும் என சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி.
கடலூர்,நாகை,திருவாரூர்,தஞ்சாவூர்,காரைக்கால்,நாகப்பட்டினம்,ராமநாதபுரம்,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். அதேபோல் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.சென்னையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும். கஜா புயலினால் சென்னைக்கு பெரிய ஆபத்து இல்லை.
மேலும் புயல் 18 கிமீ வேகத்தில் நாகையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி புயலின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் காற்றின் வேகம் 80-90 கிமீ , அவ்வப்போது 100கிமீ வேகத்தில் இருக்கும்.
