உலகின் 2வது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டாரக சென்னை சிறுவன் தேர்வு!
நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ்.டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். மேலும்,12 வயதே ஆன குகேஷ் நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், உலகிலேயே 2வது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து, டெல்லியில் பேட்டியளித்த குகேஷ், உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே தனது லட்சியம் என கூறினார்.
உக்ரைன் நாட்டின் செர்ஜி கர்ஜாகின் 12 வயது, ஏழு மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதே உலகளவில் மிகக் குறைந்த வயது கிராண்ட் மாஸ்டர் பட்டம் ஆகும். அதை வெறும் 18 நாட்களில் தவற விட்டுள்ளார் குகேஷ்.
கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல மூன்று ஜி.எம்.நார்ம் வெற்றிகளை பெற வேண்டும்.
முதல் ஜி.எம் நார்ம் வெற்றி – 2018 பாங்காக் ஓபன் தொடர்
இரண்டாவது ஜி.எம் நார்ம் வெற்றி – 12 வேர்ல்ட் கேடட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி.
மூன்றாவது ஜி.எம் நார்ம் வெற்றி – 17-வது டெல்லி சர்வதேச ஓபன் செஸ் தொடர்.
இந்த பட்டத்தின் மூலம் இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் குகேஷ். இவரது ரோல் மாடல் செஸ் ஆட்டக்காரர்கள் புகழ்பெற்ற செஸ் ஆட்டக்காரர் பாபி பிஷ்ஷர் மற்றும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். விஸ்வநாதன் ஆனந்துடன் விரைவில் ஒரு போட்டியில் செஸ் ஆட வேண்டும் என்ற தன் விருப்பத்தை கிராண்ட்மாஸ்டர் வெற்றிக்கு பின் கூறினார் குகேஷ்.
