சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக ஒரு தகவல் உலவி வருகிறது . ராகா ஏராளமான அமெரிக்க டாலர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் ஒரு வெளிநாட்டு விமான நிலையத்தில் பிடிபட்டார் என்பதே அது. (இதுவரை இத்தகவல் முறைப்படி யாராலும் உறுதிப் படுத்தப் படவோ, இதற்கான ஆதாரங்கள் கொடுக்கப்படவோ இல்லை என்றாலும் காலஞ்சென்ற அகமது படேல் உட்பட யாராலும் இத்தகவல் மறுக்கப் படவும் இல்லை. இதேபோலத்தான் ஒரு பெண் இவரால் பலாத்காரம் செய்யப் பட்டதாக உலவும் கதையும். இன்று வரை இது ஆழ்ந்த மர்மமாகவே உள்ளது.
நாம் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். தாய்லாந்திற்கும் பிற அயல்நாட்டு உல்லாச சுற்றுலாத்தலங்களுக்கும் அவர் போவதாகக் காட்சிப் படுத்தப் படுவது, “அவர் பெரும்போக்கானவர், தீவிர அரசியலில் ஈடுபாடற்றவர்” என்ற பிம்பத்தை உருவாக்கி பெரும்பாலான இந்தியர்களை நம்ப வைத்து ஏமாற்றவே. இதை நான் ஏன் உறுதியாக நம்புகிறேன் என்றால்- அவர் Z+ பாதுகாப்பில் இருப்பவர். அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் அசைவினையும் அந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிந்திருக்கவேண்டியது அவசியம். ஆனாலும் அவர் திடீர் திடீரெனெ மாயமாகிறார். இப்படி அடிக்கடி மாயமாக மறைவது இந்தியாவுக்கு எதிரான அவருடைய ரகசிய நடவடிக்கைகளை மறைப்பதற்காகவே இருக்கக் கூடும் என்பதும் மிகவும் சாத்தியமே. பொது மக்களைப் போலவே அவரது பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டிய அதிகாரிகளும் அவரது பயணத்திட்டங்கள் குறித்து எதுவும் அறியாதவர்களாகவே உள்ளனர். நமது பாதுகாப்பு அமைப்புகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை, அவர்களது செயல்களுக்குச் சரியான காரணங்கள் இருக்கக் கூடும். ஆனாலும் இந்த நாட்டைச் சிதைக்க அவர் செய்யும் முயற்சிகள் காலம் கடக்குமுன் தடுத்து நிறுத்தப் படவேண்டும் என்பதைத் தவிர, அவரது பயணத் திட்டங்கள் குறித்தோ, அதை நம் பாதுகாப்பு அமைப்புகள் அறியாமல் இருப்பது குறித்தோ எனக்கு எந்த அக்கறையும் இல்லை.
ராகாவின் இரட்டைக் குடியுரிமை பற்றிப் பற்பல சந்தேகங்களை எழுப்பி பல்வேறு ஆவணங்களையும் பலவிதமான பதிவுகளை போட்டு திரு. சுப்பிரமணியம் சுவாமி எழுப்பிய கூக்குரல்கள், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் பொதுமக்கள் பணத்தினைக் கையாடல் செய்தது போன்றவை. இன்னும் பின்னோக்கிப் போனால் போஃபர்ஸ் ஊழல் முதல் அகஸ்டா வெஸ்ட்லாண்ட், தற்போது அம்பலமான, ரஃபேல் ஒப்பந்தத்தில்(காங்கிரச் காலத்தில் போட முயன்ற ஒப்பந்தம்) கையூட்டு (kickback) பற்றிய குற்றச்சாட்டில் காங்கிரசின் பங்கு போன்றவை குறித்து நமக்குப் பல கேள்விகள் எழுகின்றன: நல்லவேளையாக புதிய அரசாங்கம் வந்தது, இந்தச் சீர்கேட்டைச் சரி செய்து குழப்பங்களைத் தீர்த்து வைத்தது. ஆயினும் ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகளில் தங்களது பங்கு மற்றும் கூட்டுச்சதி இவற்றை மறைக்கவும் பூசி மெழுகவுமே இந்த ஆட்சியின் ஒப்பத்தத்தினைக் குறித்து அவர்கள் உருவாக்கி வந்த கூச்சலும் குழப்பங்களும்.
காலம் காலமாகக் குடும்பச் சொத்தாகக் கருதப்பட்டு வந்த அமேதி தொகுதியில் இருந்து விரட்டியடிக்கப் பட்டபோது , கேரளாவில் உள்ள வயநாடு அவரைக் காப்பாற்றியது – அதுவும் பிரிவினை வாத/ பயங்கரவாத சக்திகளான பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றின் உதவி இன்றி இது சாத்தியம் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
மீனுக்கு நீர் போல இந்தக் குடும்பத்துக்கு பதவியும் அதிகாரமும். அது இல்லாமல் இந்தக் குடும்பம் வாழ முடியாது என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள். அடுத்த முறை தேர்தலில் வெற்றிபெறாவிட்டால் அவர்களது ஆட்டம் முடிந்துவிடும். எங்காவது (வெளிநாட்டில்) அடைக்கலம் தேடி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. அந்த பயமே எங்கே பார்த்தாலும் இத்தனை கூப்பாடுகள்/ஒப்பாரிகளுக்கு அடிப்படைக் காரணம்.
இவர்களது குடும்பம் மற்றும் அதன் கூட்டாளிகளின் நிலை இன்றைய காலகட்டத்தில மிகுந்த இடியாப்பச்சிக்கலில் உள்ளது. எனவே , இதிலிருந்து விடுபடவும், தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாக்கவும் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக நமது இந்த மாபெரும் தேசத்தின் ஜனநாயகத்தின் கட்டமைப்பை அழிக்கக்கூட அவர்கள் தயங்க மாட்டார்கள்.
ராகா மற்றும் அவரது சகோதரி பிரியங்கா வாத்ரா (பிங்கி) இருவரது அரசியல் பிரவேசம், அவர்களது வளர்ச்சி, அவர்களது புனைகதைகள் எப்படி/ஏன் வேலைக்கு ஆகாமல் போனது என்றும் பின்னாளில் விவாதிப்போம்.
எனவே நாம் ராகா ஒரு கோமாளி என்று ஒருபோதும் நம்பக் கூடாது-அவர் கோமாளி இல்லை-இந்தியாவை நாசம் செய்யத் திட்டமிட்டுச் செயல்படும் பல்வேறு கருவிகளை இயக்கும் மிக ஆபத்தான உந்து சக்தி அவர்.
ஜெய்ஹிந்த்
