அ.தி.மு.கவில் பிரச்சனை ஏற்பட்டது முதல் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. படுதோல்வியை சந்தித்த நிலையில் தினகரனுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் அ.தி.மு.க.வில் இணையக் கூடும் என தகவல்கள் வெளியான நிலையில் தினகரனுக்கு எதிராக தங்க தமிழ்ச் செல்வன் கருத்து தெரிவித்த ஆடியோ வெளியானது.
இதையடுத்து தங்க தமிழ்செல்வனை நீக்கிவிட்டதாக தினகரன் தெரிவித்தார். இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன்,ஆளுமைமிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்வதாக தெரிவித்தார். தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாவலராக மு.க.ஸ்டாலின் திகழ்வதாகவும், நேர்மையான ஆட்சியை மு.க.ஸ்டாலினால் மட்டுமே தரமுடியும் என்றும் அவர் கூறினார்.
