சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த ஃபோக்ஸ்வேகன் (VOLKSWAGEN) நிறுவனம் நாளை மாலை 5 மணிக்குள் ₹100 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவு!
ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி டெபாசிட் செலுத்த பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்ணயித்ததை விட அதிகமாக ஃபோக்ஸ்வேகன் கார் புகை வெளியிடுவதாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாளை மாலைக்குள் ரூ.100 கோடி செலுத்தாவிடில் கார் நிறுவன நிர்வாகியை கைது செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 100 கோடி செலுத்த தவறினால் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிரடி அறிவிப்பு
