விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் சென்றவர்களைப் பிடித்த போலீசார் புதிய ஹெல்மட் வாங்கி அணிந்த பின்னரே வாகனங்களை விடுவித்தனர்.
திருச்சுழி, விருதுநகர், மதுரை மற்றும் பந்தல்குடி சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மட் அணியாமல் சென்ற 300க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளை மடக்கிபிடித்து இருசக்கர வாகன ஓட்டிகளோடு சேர்த்து அவர்களின் வாகனங்களையும் மொத்தமாக காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
அங்கு வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்ததோடு அவர்கள் வீட்டில் ஹெல்மட் வைத்திருந்தால் எடுத்துவர சொல்லியும், ஹெல்மட் இல்லை என்றால் புதிதாக கடையில் வாங்கி வரச்சொல்லி அதனை அணிந்த பின்னரே வாகனங்களை ஒப்படைத்தனர்.
