பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த மரணங்களுக்கு லிச்சியை வெறும் வயிற்றில் உண்பதால் ஏற்படும் பாதிப்பே காரணம் என்று தகவல் வெளியானது. இது குறித்து மக்களவையில் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடி, இது லிச்சி பயிரிட்ட விவசாயிகளுக்கு எதிரான பிரச்சாரமா என்பதை கண்டறிய அரசு விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
லிச்சிக்கும் இந்த மரணங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ரூடி, லிச்சியின் பெயரைக் கெடுப்பதற்கான சதிபோல் தெரிகிறது என்றும் பல ஆண்டுகளாக, நமது குழந்தைப் பருவத்தில் இருந்தே நாம் லிச்சியை விரும்பி உண்ணுகிறோம் என்றும் தெரிவித்தார்.இதுவரை இப்படி ஒரு நோயை நாம் கண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
