நேற்று மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் அதாவது தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதியில் நகர்ந்து செல்லும். அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை நாகை காரைக்கால் திருவாரூர் அரியலூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக செங்கோட்டை 8செ.மீ, மணிமுத்தாறு 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.இடைவெளி விட்டு சில நேரம் மட்டுமே மழைக்கு வாய்ப்பு. 1மணி முதல் 2மணி வரை இடியுடன் கூடிய மளைக்கு வாய்ப.
இன்று மற்றும் நாளை மீனவர்களுக்கு கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி