தமிழ்

சபரிமலை கோவிலில் நுழைந்த இரண்டு பெண்கள் யார்?

நேற்று கேரளாவில் ”பெண்கள் சுவர்” போராட்டம் நடத்தியதற்கு மறுநாளான இன்று 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் இரண்டு பெண்கள் பிந்து மற்றும் கனக துர்கா போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். மலப்புரத்தை சேர்ந்த  கனக துர்கா மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து என்பதையும் போலீஸ் உறுதி படுத்தியுள்ளது. இதில் பிந்து என்பவர் வழக்கறிஞர். இவர்கள் இருவரும் கேரளா மாநில சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் கோவிலின் வடக்கு வாசல் வழியே நுழைந்து மஞ்ச மாதா ஸ்தலம் வழியே வந்தனர். இவர்களின் தரிசனம் முடித்து வெளியேறும் வரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து சுத்திகலச பூஜைக்காக கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சபரிமலை கோவிலுக்குள் நுழையும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =

To Top
WhatsApp WhatsApp us