போர் நெறிமுறைகளை மீறி எல்லையில் அவ்வபோது பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிற்கு வரும் தபால்களை பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்க பிரசாத் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து பேசிய ரவிசங்கர் பிரசாத், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தபால்துறையின் கடிதங்களை இந்தியாவுக்கு அனுப்புவதை பாகிஸ்தான் அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றும், பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது என்றும் எச்சரித்துள்ளார்.
