தமிழ்

சமூக வலைதளங்களில் அதிக அளவில் மத ரீதியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதனை தடுக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் அதிக அளவில் மத ரீதியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதனை தடுக்க வேண்டும். குறிப்பாக உத்திரபிரதேசத்தில், மாயாவதி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல் கட்சியின் தலைவர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு மீறி பிரச்சாரம் செய்வதாகவும் மனுசுக்கானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜாதி, மதம் ஆகியவற்றை கொண்டு தேர்தல் ஆதாயம் காணும் வேட்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை.

சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுதி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுங்கள் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். மேலும் இது போன்ற விஷயங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் விதி முறைகள் மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவே அதிகாரம் உள்ளது , மேலும் சம்மந்தப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய விதிகள் எங்களுக்கு இல்லை.

மேலும் வழக்கு பதிவு செய்யவும், நோட்டீஸ் அனுப்பவுமே எங்களுக்கான அதிகாரம் உள்ளது, விதிகளை மீறும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரமும் இல்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி, நாளை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Click to comment

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *

three × 3 =

To Top
WhatsApp WhatsApp us