தமிழ்

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த விவகாரத்தில் பதில் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த விவகாரத்தில் பதில் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்து வருகிறார் நடப்பு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் ரபேல் விவகாரத்தை மிகப் பிரதானமாக ராகுல்காந்தி கையில் எடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் ரபேல் விவகாரத்தை மத்திய அரசு தவறான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் எனவே ரபேல் ஊழல் குறித்த சீராய்வு மனு வினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருந்தது.

ரபேல் ஊழல் குறித்து ஊடகங்களில் வெளியாகி இருந்த ஆவணங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு இருந்தது.

வழக்கை மீண்டும் விசாரிக்க படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்ததை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் மிகத் தீவிரமாக rebel விவகாரத்தை கையில் எடுத்தார் ராகுல் காந்தி.

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி திருடர் ஆகி விட்டார் என கடுமையான விமர்சனத்தை ராகுல் காந்தி முன்வைத்திருந்தார்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பொழுது தேர்தல் ஆதாயத்திற்காக ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்புவதாகவும் இதனை நீதிமன்ற அவமதிப்பு கருதி ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி இந்த மனு மீது பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Click to comment

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *

three + 10 =

To Top
WhatsApp WhatsApp us