தமிழ்

மோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு பி எம் நரேந்திர மோடி திரைப்படம் எடுக்கப்பட்டது.

திரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட தயாரிப்புக்குழு திட்டம் வைத்திருந்தார்கள். தேர்தல் நேரம் என்பதால் ஒரு கட்சியின் தலைவர் குறித்து திரைப்படம் வெளியாவது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தனர்.

பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த பொழுது திரைப்படத்தை பார்த்து விட்டீர்களா என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்கவே முதலில் திரைப்படத்தைப் பாருங்கள் அதற்குப் பிறகு படத்திற்கு தடை விதிப்பது குறித்து முடிவெடுங்கள், என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Click to comment

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *

ten + thirteen =

To Top
WhatsApp WhatsApp us