மும்பையின் தெற்கு பகுதியான டாங்கிரியின் தண்டேல் தெருவில், 4 மாடி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது.
பலத்த சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்ததை அறிந்து அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் சுமார் 50 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், மும்பையில் பெய்த தொடர் மழை காரணமாக அஸ்திவாரம் உறுதித்தன்மையை இழந்து கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
