புதுச்சேரியில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட இரு கிராம மீனவர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
தடைசெய்யப்பட்ட வலைகளை நல்லவாடு பகுதி மீனவர்கள் பயன்படுத்துவதாக வீராம்பட்டினம் மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாகவே இருகிராம மீனவர்களும் நடுவில் மோதல் இருந்தாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடலில் இருகிராம மீனவர்களுக்கு நடுவில் நேற்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பிரச்சனை பெரிதாகவே இரு மீனவகிராம மீனவர்களும் புதுக்குப்பம் கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தவளக்குப்பம் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த மோதலில் காயமடைந்த 3 பேர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
