தமிழ்

கண்டமங்கலம் அருகே தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து- 20 பேர் படுகாயம்

கண்டமங்கலம்: விழுப்புரத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வளவனூர், மடுகரை வழியாக புதுவைக்கு புறப்பட்டது. இந்த பேருந்தை காத்தவராயன் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று காலை அந்த பேருந்து கண்டமங்கலம் அருகே அற்பிசம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது பேருந்தின் முன்பக்க அச்சு முறிந்தது.

இதனால் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பேருந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி அருகில் இருந்த தென்னை மரத்தில் மோதி சாய்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *

1 × four =

To Top
WhatsApp WhatsApp us