தமிழ்

எந்த ஒரு இந்துவும், தீவிரவாதியாக இருப்பதில்லை; கமலுக்கு மோடி பதில்

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருப்பதில்லை என்றும், அப்படி, தீவிரவாதியாக இருந்தால், அந்த நபர் இந்து அல்ல என நடிகர் கமலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஓர் இந்து என்றும், அவர் பெயர் நாதூரம் கோட்சே என்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், நியூஸ் எக்ஸ் என்ற ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கமல்ஹாசனின் சர்ச்சை கருத்து பற்றி, பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.

அப்போது, எந்த ஒரு இந்துவும், தீவிரவாதியாக இருப்பதில்லை என்றும், ஒருவேளை, தீவிரவாதியாக இருந்தால், அவன் இந்துவாக இருக்க முடியாது என்றும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

தாம் அறிந்த வரையில், தன்னை ஒரு இந்துவாக கூறிக்கொள்ளும் யாரும், தீவிரவாதியாக இருப்பதில்லை என்றார். தனது நினைவுக்கு எட்டிய வரையில், எந்த ஒரு தீவிரவாதியும் தன்னை இந்துவாக கூறிக் கொண்டது இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். உலகமே ஒரு குடும்பம் என்பது தான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என்றுக்கூறிய நரேந்திர மோடி, அப்படிபட்ட இந்து தர்மம், எந்தவொரு நபரையும், காயப்படுத்துவதையோ, கொலை செய்வதையோ அனுமதிக்காது என்றும், கூறியிருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *

6 − five =

To Top
WhatsApp WhatsApp us